Date:

கொவிட் நோயாளர்களுக்கான ஒக்சிஜன் தேவை அதிகரிப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கொவிட் நோயாளர்களில் பெரும்பாலானவர்கள் முறையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர்களில் பெரும்பாலான நோயாளர்கள் நடுத்தர வயதுடையவர்கள் என்பதுடன், தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலகில் காணப்படும் கொவிட் தடுப்பூசி தொடர்பான தரவுகளுக்கு அமைய, எமது நாட்டில் மூன்றாவது (பூஸ்டர்) தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதனை பெற்றுக்கொள்வதற்காக பல தடுப்பூசி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய விரைந்து செயலூக்கி தடுப்பூசியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு வைத்தியர் சந்தன கஜநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை,ஒக்சிஜன் தேவைப்பாடு அதிகரித்துள்ளதை அவதானிக்ககூடியதாக உள்ளதென தெரிவிக்கும் வைத்தியர், தொழிலுக்கு அல்லது வெளிநாடுகளுக்கு செல்வதற்காக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என எண்ணாமல், தத்தமது உயிரை பாதுகாப்பதனை முதன்மை நோக்காகக் கொண்டு மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு  பொதுமக்களிடம் கோரியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா...

கம்பஹாவில் சில பகுதிகளில் நாளை 10 மணிநேர நீர்வெட்டு

திருத்தப்பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 10 மணிநேரம்...

நாணய மாற்று விகிதம்

இன்றைய (13.08.2025) நாணய மாற்று விகிதம்

40 கட்சிகளின் பதிவு விண்ணப்பங்களை நிராகரித்த தேர்தல்கள் ஆணைக்குழு

புதிய கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கப்பட்ட 77 விண்ணப்பங்களுள் 40 விண்ணப்பங்கள்...