கேகாலை – ஹெட்டிமுல்லை – மாகுர – கனேகொடதென்ன பகுதியைச் சேர்ந்த 58 வயதான நபரே கொரோனா தொற்றினால் உயிரிழந்தார்.கொரோனா தொற்றை தடுப்பதாக தெரிவித்து, உள்நாட்டு ஒளடதம் என்ற பாணியை உற்பத்தி செய்த கேகாலை தம்மிக்க பண்டாரவின் இளைய சகோதரரே இவ்வாறு உயிரிழந்தார்.
அவரின் இறுதிக் கிரியைகள், கொரோனா சட்ட விதிகளுக்கு அமைய நேற்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
அவர் புற்றுநோய்க்காக சிகிச்சைப் பெற்றுவந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தம்மிக்க பண்டார என்பவரால் தயாரிக்கப்பட்ட பாணி மருந்து எந்தவகையிலும் கொவிட் 19 நோய்க்கு மருந்தாக அமையாது என்று குறித்த மருந்தை பரிசீலிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு தமது அறிக்கையில் உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.