நேற்று கடற்படையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் குறித்த 22 மற்றும் 23 வயதுடையவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் நெல்லியடி பிரதேசத்தில் வைத்து 70 லட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 818 கிராம் அளவிலான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.