Date:

48 மணி நேரத்திற்கும் மேலாக காய்ச்சல் நீடித்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளவும்- ஹேமந்த ஹேரத்

ஒமைக்ரொன், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் ஆகியன சமூகத்தில் மிக வேகமாக பரவி வருவதை அவதானிக்க கூடியதாகவுள்ளதாக  சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதனால் 48 மணிநேரங்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளுமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்கள் தமக்கு எந்த வகையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்ற முடிவுகளை தாமாக எடுத்துக் கொள்கின்றனர். இதனைவிடுத்து மருத்துவ உதவியை நாடுவதே சிறந்த தெரிவாக அமையும்.

இன்றைய நாட்களில் சமூகத்தில் ஒமைக்ரொன் மற்றும் டெங்கு காய்ச்சல்  ஆகியவற்றினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எனவே, 48 மணி நேரத்திற்கும் மேலாக காய்ச்சல் நீடித்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுவதே முதன்மையானது என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், கட்டுக்கதைகள் மற்றும் தவறான கருத்துக்களுக்கு ஆளாகாமல், தகுதியானவர்கள் கூடிய விரைவில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு வைத்தியர் ஹேமந்த ஹேரத் கேட்டுக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வௌ்ளை மாளிகையின் கூரையின் மீதேறிய ட்ரம்ப்

வெள்ளை மாளிகையின் கூரையில் ஒரு அசாதாரண இடத்திலிருந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ஜனாதிபதி...

1,408 வைத்தியர்களை நியமிக்க விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

பயிற்சி முடித்த 1,408 மருத்துவர்களை முதன்மை தர மருத்துவ அதிகாரிகளாக நியமிக்க...

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை...

கோபா தவிசாளர் இராஜினாமா

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த சேனாரத்ன,...