Date:

போலி தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி பரீட்சை எழுத வந்திருந்த தேரர் கைது

போலி தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி கொக்மாதுவ, வெலிகம பிரதேசத்தில் தேரர் ஒருவருக்காக , 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர் தரப் பரீட்சை எழுத வந்திருந்ததாக தெரிவிக்கப்படும், இன்னுமொரு தேரர் புத்தளம் சாந்த மரியா தமிழ் வித்தியாலயத்தியத்திலுள்ள பரீட்சை நிலையத்தில் வைத்து சந்தேகத்தின் அடிப்படையில் இன்று கைதுசெய்யப்பட்டதாக புத்தளம் பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.

புத்தளம் சாந்த மரியா தமிழ் வித்தியத்திலுள்ள பரீட்சை நிலையத்தில் நான்காவது நாளாக க.பொ.த. உயர் தரப் பரீட்சை சிங்கள பாடத்துக்காக இரண்டாம் பிரிவு வினாத்தாளுக்கு விடை எழுதுவதற்காக வருகை தந்திருந்த குறித்த தேரர் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தில் அடிப்படையில் அவர் பரீட்சை நிலைய தலைவரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளாா்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தேரரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதுடன் புத்தளம் பொலிஸாா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனா்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

முன்னாள் அமைச்சர் கெஹலியவின் புதல்வி சமித்ரிக்கு பிணை

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு...

ஈரானிலிருந்து வெளியேற அமெரிக்க பிரஜைகளுக்கு டிரம்ப் அறிவிப்பு

ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள், உடனடியாக அங்கு வந்து வெளியேற வேண்டும்...

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் கைது!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளான சமித்ரி ரம்புக்வெல்ல இலஞ்ச...