Date:

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு-டீசலுடன் இலங்கை வந்த இந்திய கப்பல்

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட 40, 000 மெற்றிக் டன் டீசல் அடங்கிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளது.

கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த குறித்த கப்பலை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உள்ளிட்ட குழுவினர் பொறுப்பேற்றுள்ளனர்.

இதன்போது, கருத்து தெரிவித்த வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இந்தியா 500 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க முன்வந்திருந்ததாக குறிப்பிட்டார்.

எனினும், அந்த கடனை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டால் மின்சார விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை ஆகியவற்றை சுட்டிக்காட்டி இந்தியாவிடம் இருந்து உடனடியான உதவிகளை கோரியிருந்தோம்.

இதனை கருத்திற்கொண்டு 40,00 மெற்றிக் டன் டீசல் அடங்கிய கப்பல் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மருத்துவ வரலாற்றில் அழியாத தடம் பதித்த மாமனிதர் பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப்..!

இலங்கையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு முன்னோடியாக விளங்கி, “சிறுநீரக மருத்துவத்தின்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...