பாராளுமன்றத்தில் சில பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட 28 பேருக்கு கொரோனா தொற்று நேற்றய தினம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் பணியாற்றும் 112 பேர் நேற்றுக் காலை பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். இதனடிப்படையில் அவர்களில் 28 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு தொற்றுக்குள்ளானோரை உடனடியாக தனிமைப்படுத்துவதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த எண்ணிக்கையுடன் பாராளுமன்றத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது.
பாராளுமன்றத்தில் விசேட சுகாதார வழிகாட்டல்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. வெளி நபர்கள் வருகை தருவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.