சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் இல்லத்தின் மீது இன்று (14) அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலை முழுமையாக கண்டிப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றினை விடுத்துள்ள அவர், ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவுக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்னிற்க தாம் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ இதன்போது வலியுறுத்தியுள்ளார்.