அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியின் போது, சர்வதேச போட்டியில் தகாத மொழிப் பிரயோகத்தை பயன்படுத்தியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி.) நன்னடத்தை விதி 2.3 ஐ மீறியதாக இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) போட்டி மத்தியஸ்தர் டேவிட் பூன் அவரை கடுமையாக கண்டித்துள்ளார்.
இது அவரது ஒழுக்கம் சார்ந்த விடயத்தில் ஒரு பாதக புள்ளியை சேர்த்துள்ளது.
துடுப்பெடுத்தாடும்போது, பந்தை தாக்குவதனை தவறிவிட்டதயைடுத்து பெதும் நிஸ்ஸங்க மேற்கொண்ட வார்த்தை பிரயோகம் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நடத்தை விதிகளின் சில சரத்துகளை மீறுவதாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.