பண்டிகைக் காலத்தில் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும்,
கோதுமை மா, சீமெந்து போன்ற பொருட்களுக்கான தட்டுப்பாடு விரைவில் நீக்கப்படும் என்றும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்தார்.
தற்போது துறை முகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்களுக்கு தாமதக்கட்டணம் இன்றி விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.