ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்சலட்டால் முன்வைக்கப்படவுள்ள அறிக்கையின் பிரதி இன்று இலங்கை அரசாங்கத்துக்குக் கிடைக்கப்பெறவுள்ளது.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகேவை மேற்கோள்காட்டி ஆங்கில பத்திரிகை ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாத இறுதியிலும் மார்ச் மாதத்திலும் ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வு நடைபெறவுள்ளது.
இதில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையின் அடிப்படையிலான முன்னேற்றங்கள் குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார்.
இந்த அறிக்கை தொடர்பாக இலங்கை அரசாங்கம் வழங்கும் பதிலும், தமது அறிக்கை வாசிப்பின் போது ஆணையாளர் உள்ளடக்குவார் என்று தெரிவிக்கப்படுகிறது.