Date:

ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீது தாக்குதல்

சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டி இன்று காலை இனந்தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 2.10 அளவில் பிலியந்தலை கேம்பிரிட்ஜ் கோர்ட் வீட்டுத் தொகுதிக்கு பிரவேசித்த நான்கு பேர் கொண்ட குழுவினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரம தெரிவித்தார்.

வெள்ளை சிற்றூர்ந்தொன்றில் வந்த குழுவினர், குடியிருப்பின் பிரதான நுழைவாயிலை பலவந்தமாக திறந்து, அங்கிருந்தா பாதுகாப்பு உத்தியோகத்தரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக நேரில் கண்ட சாட்சியத்தின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

தாக்குதல் நடத்தியவர்கள் வீட்டின் மீது கற்களை வீசி தாக்கியதாக சமுதித்த சமரவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பல தடவைகள் துப்பாக்கிச் சத்தங்களும் கேட்டதாக அவர் கூறினார்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் உடனடியாக அறிவிக்கப்பட்டதாகவும், அதன் பிரகாரம் காவல்துறையினர் வந்து வீட்டுத் திட்டத்தைச் சூழவுள்ள பகுதிகளில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, குறித்த தாக்குதல் தொடர்பான சீ.சி.ரீ.வி காணொளிகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லொஹான் ரத்வத்த மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில்...

கொழும்பின் ஆபத்தான பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது

கொழும்பில் போதைப்பொருள் பாவனை அதிகமுள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய அபாயகர...

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று

2025 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று...

நாளை சில பகுதிகளில் நீர் விநியோகத்தடை

சில பகுதிகளில் நாளைய தினம் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என தேசிய...