Date:

தளர்வான வணிகச் சூழல் பணமோசடி செய்பவர்களுக்கு துறைமுக நகரம் சிறந்த புகலிடமாக இருக்கும்- பெர்னாட் பெர்னாண்டோ

தளர்வான வணிகச் சூழல் பணமோசடி செய்பவர்களுக்கு சிறந்த புகலிடமாக இருக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளதாக தொழிற்சங்க தலைவர் பெர்னாட் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும் 2017ஆம் ஆண்டு கடன் சுமை காரணமாக ஒரு துறைமுகத்தை வெளிநாட்டு நிறுவனங்களிடம் கையளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதேபோல கொழும்பு துறைமுக நகரமும் நீண்ட கால அடிப்படையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமாகிவிடும் அபாயம் உள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.

“நமது நாட்டின் உள்நாட்டு வளங்களை சீனா பறித்து நம்மை கடனில் தள்ளியுள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.இவ்வாறான சூழலில் புதிய துறைமுக நகரத்தை உருவாக்கி வருகின்றனர்.
இந்த துறைமுகத்தால் எமது நாட்டிற்கு ஏற்படும் விளைவுகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

எமது நாட்டில் சீனாவின் உதவியுடன் வீதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.  தற்போது அதிக எண்ணிக்கையிலான  வீதிகள் புனரமைக்கப்பட்டு நிர்மாணிக்கப்படுகின்றன.

ஆனால் அந்த வீதிகளில்  வாகனங்கள் ஓட்டுவதற்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய நாட்டில் அந்நியச் செலாவணி இல்லாத நிலையில் சிலர் சைக்கிள்களைப் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த துறைமுக நகரம் நாட்டின் ஏழை மக்களுக்கு எந்த நிவாரணத்தையும் தரவில்லை. இதனால் சீனர்களுக்கு பயன் கிடைக்கின்றது.

இன்று இந்த பகுதிகளில் சீனர்களை அடிக்கடி காணக்கூடியதாக உள்ளது. இன்னும் 10 வருடங்களின் பின்னர் கொழும்பில் மாத்திரமல்ல முழு நாடும் சீனாவிற்கு சொந்தமாக  மாறி விடும்” என
தொழிற்சங்க தலைவர் பெர்னாட் பெர்னாண்டோ மேலும் கருத்து தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாளைக்கு இரண்டு ’QR’

தற்போது நடைமுறையிலுள்ள 'QR' ஒதுக்கீட்டு முறையின் கீழ், நாளை (ஏப்ரல் 01)...

அரிசி வகைகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு

உள்நாட்டு சந்தையில் தற்போது நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி...

சோஹாரா புகாரி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சோஹாரா புகாரியினால்...

பிரைட் ரைஸ், கொத்து விலை அதிகரிப்பு

மின்சார கட்டண உயர்வுக்கு இணையாக, பிரைட் ரைஸ் (Fried Rice) மற்றும்...