கடலை மையப்படுத்தி அமையப்பெற்று வரும் கொழும்பு துறைமுக நகரம் நவீன நகரமாக மாறி வருகின்றது. இது கடல்கடந்த சர்வதேச நிதி மையங்கள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் சொகுசு படகுகளுக்கான வசதிகளை வழங்கக்கூடிய ஒரு இடமாக மாறி வருகிறது.
இந்த விடயம் தொடர்ப்பில் கருத்து தெரிவித்த அரசியல் ஆய்வாளர் அஜித் கிஹான்,
புதிதாக உருவாக்கப்பட்டு வரும் இந்த நவீன நகரத்தில் சுமார் 80 ஆயிரம் பேர் வரையில் தங்கியிருக்கலாம் என்பதுடன் அங்கு முதலீடு செய்து வணிகம் செய்பவர்களுக்கு வரிச் சலுகையும் வழங்கப்படவுள்ளது.
இந்த துறைமுக நகரத் திட்டம் 2014 இல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு 178 ஹெக்டேர் நிலப்பரப்பில் கட்டிடங்கள் கட்ட முடியும் என்பதுடன் அதனை 99 ஆண்டு கால குத்தகையின் அடிப்படையில் இந்த திட்டம் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.
மீதமுள்ள 62 ஹெக்டேர் நிலம் அரசுக்கு சொந்தமானதாகும். கொழும்பு துறைமுக நகரம் முதலீட்டாளர்களுக்கான நீண்ட கால வரிச் சலுகை இலங்கையின் ஒட்டுமொத்த வருமானத்தை மேம்படுத்தாது என அரசியல் ஆய்வாளர் அஜித் கிஹான் தெரிவித்துள்ளார்.
மேலும் துறைமுக நகரத்தினுள் இடம் பெறும் விற்பனை மற்றும் சுற்றுலா மூலம் நாட்டுக்கு எந்த நன்மையும் ஏற்படாது என்பதுடன் இந்த திட்டத்தினால் இலங்கைக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை என மேலும் அவர் வலியுறுத்தியுள்ளார்.