Date:

மஹீஷ் தீக்ஷனவை கைப்பற்றியது சென்னை சுப்பர் கிங்ஸ்!

இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன சென்னை சுப்பர் கிங்ஸ் அணியினால் 70 இலட்சம் ரூபாவுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார். இவரது அடிப்படை விலை 50 இலட்சம் இந்திய ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஸ்மந்த சமீர, லக்னோவ் சுப்பர் ஜெயன்ட்ஸ் அணியினால், 2 கோடி ஏலத்தில் வாங்கப்பட்டார். அவரது அடிப்படை விலை 50 இலட்சம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, முன்னதாக நேற்றைய தினம் இடம்பெற்ற ஏலத்தில், ஒரு கோடி இந்திய ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்த இலங்கையில் சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்க, ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியினால் 10.75 கோடி இந்திய ரூபாவுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் ஊடாக,...

ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் காப்புறுதி இலவசம்!

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10,000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களைக்...

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி அன்பளிப்பு

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும்...

இலவங்கப்பட்டை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு 260 மில்லியன் டொலர் வருமானம்

இலவங்கப்பட்டை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த ஆண்டில் 260 மில்லியன்...