எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பல், தீப்பரவலுக்கு உள்ளானமையால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பை துல்லியமாக மதிப்பிடுவதற்கு, மூன்று ஆண்டுகள் அளவில் எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய சட்ட வல்லுநர்கள் குழுவொன்று இதனைத் தெரிவித்துள்ளதாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவரான சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில், மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், அதனை அவுஸ்திரேலிய சட்ட வல்லுநர் குழுவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பவரலுக்கு உள்ளானமையால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பை மதிப்பீடு செய்த நிபுணர் குழுவுடன், அவுஸ்திரேலிய சட்ட வல்லுநர் குழு நேற்று இணையவழி நிகழ்நிலையில் நடத்திய சந்திப்பு ஒன்றின்போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.