ரம்புக்கனை – கொடவெஹெர ரஜமஹா விகாரையில் இருந்த 5 தங்க கலசங்கள் மற்றும் 3 பளிங்கு கலசங்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.
நேற்று குறித்த கலசங்கள் திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனுதுங்க குறிப்பிட்டார்.
சம்பவம் தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்தினால் பொலிஸாரிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பரிசோதனைகளுக்காக தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.