இன்று காலை 6 மணியளவில் மன்னார் பெரிய பாலம் பிரதான சோதனைச்சாவடி அருகில் வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
குளிர்பான பொருட்களை மன்னாருக்கு ஏற்றி வந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது மாந்தை மேற்கு பிரதேசத்தில் உள்ள கூராய் ஆற்றுப் பகுதியில் இருந்து மணல் ஏற்றி வந்த டிப்பர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது
குறித்த விபத்தில் இரண்டு வாகனங்களும் சேதமடைந்து வாகனத்தில் இருந்தவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் போக்குவரத்து பிரிவு பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.