Date:

வேகக் கட்டுப்பாடின்றி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, அராலி செட்டியர் மடம் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சிந்துபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உடையார் கட்டு – விசுவமடு பகுதியை சொந்த இடமாகக் கொண்டு, வட்டு மேற்கு – வட்டுக்கோட்டை பகுதியில் வசித்துவந்த கந்தசாமி நிரோஜன் (வயது 22) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவருடன் பயணித்த மற்றைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

கட்டுப்படுத்த முடியாத அதிவேகம் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த விபத்து நிகழ்ந்த இடத்தில் ஆபத்தான வளைவு ஒன்று உள்ளது. அத்துடன் வீதி அபிவிருத்தி நிறைவடைந்த நிலையில் வீதியின் ஓரத்தில் போடப்படவேண்டிய எல்லைக்கோடு இன்னமும் போடப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மருத்துவ வரலாற்றில் அழியாத தடம் பதித்த மாமனிதர் பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப்..!

இலங்கையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு முன்னோடியாக விளங்கி, “சிறுநீரக மருத்துவத்தின்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...