ஹக்மன நகரில் நேற்று திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த யாசகரின் ஆடைகளில் இருந்தும் பல்வேறு பைகளில் இருந்தும் சுமார் 400,000 ரூபா கைப்பற்றப் பட்டுள்ளது.
உயிரிழந்தவர் ஹக்மன, கொங்கல பகுதியில் வசிக்கும் 69 வயதுடைய இ. எஸ் விமலாதாச என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மலை உச்சியில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்ததாகவும், வெளியில் செல்லும் வழியில் கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
மரணம் குறித்த பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், ஆனால் அந்த நபருக்கு உறவினர்கள் இல்லை என்றும், அதனால் அவரது சடலம் உரிமை கோரப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.