Date:

ஆண் குழந்தை பிறக்க கர்ப்பினிப் பெண்ணின் தலையில் ஆணி அடித்த வைத்தியர்

பெஷாவர் நகரின் வடமேற்கு பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் ஒருவர் தலையில் இருந்த ஆணியை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளார். அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் தலையில் ஆணி எப்படி வந்தது எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அப்போது அவர், “நான் கர்ப்பமாக இருக்கிறேன். இந்தப் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறக்க சடங்குகளைச் செய்யுமாறு உள்ளூர் வைத்தியரிடம் கேட்டுக் கொண்டேன். அவரோ, எனது தலையில் 5 சென்றிமீற்றர் அளவிலான ஆணிகள் ஐந்தை அடித்து அனுப்பினார். ஆனால் எனக்கு அதனால் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. எனவே அதை அகற்ற வேண்டும்” என்றார்.

“அந்த ஆணிகள் மூளையில் தொடவில்லை. ஆணி அறையப்பட்டதால் மிகுந்த வலியில் இருந்த பெண் முதலில் தானே ஆணியை அறைந்து கொண்டதாகக் கூறினார். பின்னர் தான் அவர் தலையில் ஆணியை அந்த ஹீலர் அறைந்தது தெரியவந்தது” என்று மருத்துவர்கள் கூறினர்.

மருத்துவர்கள் அந்தப் பெண்ணின் தலையில் இருந்து ஆணியை அப்புறப்படுத்தி அனுப்பினர். இது குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து மருத்துவமனை CCTV கெமராக்களின் காட்சிகளைக் கொண்டு அந்தப் பெண்ணை பொலிஸார் தேடி வருகின்றனர். அவரை விசாரித்து அந்த ஹீலரை கைது செய்யப்போவதாக பொலிஸ்பிரிவு  தெரிவித்துள்ளது.

பெண்ணின் தலையில் ஆணி புலப்படும் எக்ஸ்ரே

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...

BREAKING: லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு

  லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு...

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...