இலங்கை இதுவரையில் நிதி உதவி எதனையும் கோரவில்லை என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
தமது பிரதிநிதிகள் அண்மையில் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்ததாகவும், இந்த விஜயம் தொடர்பில் நிறைவேற்று சபை கலந்துரையாட உள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் இதுவரையில் அதிகாரபூர்வமாக நிதி உதவிகள் எதனையும் கோரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், கோரிக்கை விடுக்கப்பட்டால் பேச்சுவார்த்தை நடாத்த தயார் எனவும், இலங்கையின் பொருளாதார நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக இலங்கை அரசாங்கம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.