பொரளையில் அமைந்துள்ள பிரபல மலர்ச்சாலையொன்றின் உரிமையாளரின் வீட்டில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த சந்தேக நபர்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இருவரும் மலர்ச்சாலை உரிமையாளரின் வீட்டிற்குள் நுழைந்து 553,000 ரூபா பணம் மற்றும் தங்கச் சங்கிலி, மோதிரம் மற்றும் கையடக்க தொலைபேசிகள் மூன்றையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் நவகமுவ – கொரத்தொட்ட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.தாம் கொள்ளையிட்ட பணத்தை வைத்து சில பொருட்களையும் கொள்வனவு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் கடந்த 6ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.