பலபிட்டிய-கோனாபீனுவல பகுதியில் கணவனால் பெற்றோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த மனைவியான பொலிஸ் சார்ஜன்ட் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபரான கணவர் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று மீனவராக தொழில் செய்து வருகிறார்.இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, கணவர் அவரை அடித்து, அவர் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்ததாகத் தெரியவருகிறது.
கைது செய்யப்பட்ட கணவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.