கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 35 சதவீதத்தினாலும் கோவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் 15 சதவீதத்தினாலும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட் தலைமை ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,”இந்த நிலையில் பூஸ்டர் தடுப்பூசியினை அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும்.மேலும் பொது இடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களிலும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.” என குறிப்பிட்டுள்ளார்.