காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பினால் உயிரிழந்துள்ளார்.
மகாவலி அதிகார சபையில் கடமையாற்றும் காணி உத்தியோகத்தரான கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த பேதுருஹேவகே ரஞ்சித் என்ற 55 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாகும்.
உயிரிழந்த காணி அதிகாரியின் பிரேத பரிசோதனை காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் மேலதிக மரண விசாரணை அதிகாரி சந்திரசேன லொக்குகேவினால் நேற்று கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது.
சுகயீனம் காரணமாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமக்கப்பட்டார். எனினும் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பினால் அவருக்கு உரிய முறையில் சிகிச்சையளிக்கப்படவில்லை.
சிறுநீரக செயலிழப்பு மற்றும் நீரிழிவு நோயின் தீவிரம் காரணமாக மரணம் ஏற்பட்டதாக மரண விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எப்படியிருப்பினும் இரத்தத்தை வடிகட்ட முடிந்திருந்தால், அவர் உயிர் பிழைத்திருக்க முடியும் உயிரிழந்த நபரின் மனைவி தெரிவித்துள்ளார்.