ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தென் கொரியாவில் இடம்பெறும் உலக சாமாதான மாநாட்டில் பங்குபற்றுவதற்காக நேற்றிரவு தென் கொரியாவை சென்றடைந்தார்.
இதன்படி நேற்று முன்தினம் கொரிய தூதுவர் வூண்ஜின் ஜெய்ங் உடன் இடம்பெற்ற உலக சமாதான மாநாடு தொடர்பான கலந்துரையாடலில், கொரியா மற்றும் இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் குறித்து அவர் கலந்துரையாடினார்.
கொரிய தூதுவருடன் குறித்த சந்திப்பு இடம்பெற்றமை தொடர்பிலும் தூதுவர் முன்வைத்த ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களையிட்டும் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் அதற்காக நன்றிகளை தெரிவித்து கொள்வதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.