கொவிட் வைரஸின் பல்வேறு திரிபுகள் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியதால், ஒவ்வொரு வைரஸின் விளைவுகள் குறித்தும் பல்வேறு மட்டங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
அதற்கமைய, தொற்றுக்கு உள்ளானோருக்கு ஏற்படும் பாதிப்பு வைரஸின் ஆயுட்காலம் போன்ற பல காரணிகளை மருத்துவ ஆராய்ச்சியாளர்களால் கண்டறிய முடிந்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவருக்கு, 5 நாட்களுக்கு மட்டுமே வைரஸ் உடலில் செயற்பாட்டில் இருக்கும் என அண்மைய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.