இன்று ‘கிராம அபிவிருத்தி மன்றங்களின் ஒன்றியம்’ எனும் அமைப்பால் நுவரெலியா மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக 5 பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
எவ்வாறாயினும் தற்போது நுவரெலியா மாவட்டத்தில் இரண்டு உப பிரதேச செயலகங்கள் மாத்திரம் திறக்கப்பட்டுள்ளன.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.