இன்று யால தேசிய பூங்காவின் நுழைவாயிலிலிருந்து வெல்மல்கெம பிரதேசம் வரை பயணித்துக் கொண்டிருந்த சபாரி வாகனத்தை யானையொன்று தாக்கியுள்ளது. அந்த வாகனத்துக்குள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நால்வர் இருந்துள்ளனா்.
நந்திமித்ர என்றழைக்கப்படும் யானையே இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வாகனம் இந்த தாக்குதலில் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.