இன்று (09) முதல் எதிர்வரும் 3 மாத காலத்திற்கு வெளிநாடு செல்ல பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியதீனிற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, ரிஷாட் பதியூதீனின் கடவூச்சீட்டை வழங்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் ரஜித்ரா ஜயசூரிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனிற்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.