LANKA REMIT என்ற அப்(app) இலங்கை மத்திய வங்கி வளாகத்தில் வைத்து நேற்று உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்குப் பணம் அனுப்பும் செயல்முறையை எளிதாக்கும் வகையில் கையடக்கத் தொலைபேசி செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் செயலியின் மூலம் எந்த நாட்டிலிருந்தும் இலங்கையில் உள்ள எந்த வங்கிக் கணக்கிற்கும் உடனடி பணப் பரிமாற்றச் சேவைகளைப் பெற முடியும்.
இந்த முயற்சியில் இணைந்த முதல் வங்கிகளில் ஒன்றாக மக்கள் வங்கி மாறியதுடன், பிரதம அதிதியாக இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர், அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களினால் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.
வெளியீட்டு விழாவில் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், உதவி ஆளுநர் தர்மசிறி குமாரதுங்க, மக்கள் வங்கியின் பொது முகாமையாளர் ரஞ்சித் கொடிதுவாக்கு, லங்கா கிளியர் லிமிடெட் தலைவர் , வங்கிகளின் பொது முகாமையாளர்கள் மற்றும் மத்திய வங்கி சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.