Date:

மன்னார் மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

நிரந்தர நியமனம் மற்றும் சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி மன்னார், நானாட்டான், மடு, முசலி, மாந்தை மேற்கு பகுதிகளைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் இன்றையதினம் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

 

25 வருடங்களுக்கு மேலாக முன் பள்ளி ஆசிரியர்களாகக் கடமையாற்றி வருகின்ற நிலையில் இது வரை தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வில்லை.

முன் பள்ளிகளில் பல தரப்பட்ட கல்வி நடவடிக்கைகளுக்கு தங்களைப் பயன்படுத்துகின்ற போதும் தங்களுக்கு மாதம் வெறுமனே 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவு மாத்திரமே வழங்கப்படுகிறது.

ஜனாதிபதி, ஆளுநர் மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு தங்கள் கோரிக்கைகளை மகஜர்களாகவும் நேரில் சந்தித்துத் தெரிவித்துள்ள போதும் இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை.

இவ்வாறு பல கருததுக்களை முன்வைத்தது மட்டுமில்லாமல், பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும் முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் தங்கள் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றினை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெலிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பியூமியின் மகன் கைது

ராஜகிரியவின் கலபலுவாவ பகுதியில் ஒருவரைத் தாக்கியதாக வெலிக்கடை பொலிஸாரால் பியூமி ஹன்சமாலியின்...

செவ்வந்தியின் தாய் மரணம்

பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சந்தேக...

கெஹலியவுக்கு எதிரான ஆவணங்களை அச்சிட ரூ.1.5 மில்லியன் செலவு

போலி இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 12 பேருக்கு...

ட்ரம்பின் தீர்வை வரி: சஜித் அதிரடி அறிவிப்பு

எமது நாட்டு ஏற்றுமதிகளில் 26.4% பங்களிப்பைப் பெற்றுத் தரும் ஏற்றுமதி தலமாக...