நேற்றிரவு புத்தளம் – பல்லம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொடுவா பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம் ஆண்டிகம பெரியமடு பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய நபர் ஒருவர் எனவும்
அவரால் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கட்டுத்துவக்கு தவறுதலாக வெடித்துள்ளதாகவும் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் பல்லம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.