நாட்டில் 20 – 29 வயதுக்கிடைப்பட்டவர்களில் 7 லட்சத்து 19,000 பேர்களும், 30 – 60 வயதுக்கிடைப்பட்டவர்களில் 03 இலட்சத்து 86 ஆயிரத்து 408 பேர்களும் இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.
மொத்தமாக 20 வயதுக்கு மேற்பட்ட 11 இலட்சத்து 70 ஆயிரம் பேர் இதுவரை எந்தவொரு கோவிட் தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளவில்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எம்.எச்.எம். சித்ரானந்த சுட்டிக் காட்டியுள்ளார்.