சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தததன் காரணமாக பணிப்புறக்கணிப்பினை தொடரவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
சில கோரிக்கைகளை முன்னிறுத்தி தாதியர்கள் உள்ளிட்ட 18 சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை இன்றும் தொடர்கின்றது.
வேதன உயர்வு உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் உள்ளிட்ட 18 சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் நேற்று காலை முதல் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இதன்காரணமாக பல வைத்தியசாலைகளின் சேவைகள் பாதிப்படைந்துள்ளன.
சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளுக்கு சென்றிருந்த நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது