Date:

திருமலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

திருகோணமலை – மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று (21) மாலை தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த சஜித் பிரியந்த திசாநாயக்க (21 வயது) என தெரியவருகின்றது.

மஹதிவுல்வெவ – கிபுல்பொக்க குளத்துக்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு திருகோணமலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எஸ்.எம். ரூமி சடலத்தைப் பார்வையிட்டதுடன் குறித்த சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

இருந்த போதிலும் குறித்த இளைஞரின் தந்தை உயிரிழந்துள்ளதாகவும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நண்பர் ஒருவரின் வீட்டில் வசித்து வந்ததாகவும் வழமை போன்று குளத்திற்கு குளிக்க சென்று வீடு திரும்பவில்லை என குளத்துக்கு சென்று தேடிய போது குறித்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

சடலத்தை பிரேத பரிசோதனை முடிவடைந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மஹரகம நகரில் உள்ள கடைகளில் தீப்பரவல்

மஹரகம நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக...

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...