தங்களது கோரிக்கைகள் தொடர்பில் இன்றைய தினம் கலந்துரையாடுவதற்காக சுகாதார அமைச்சரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த துணை வைத்திய சேவை ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
வேதன உயர்வு உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் உள்ளிட்ட 18 சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் நேற்று காலை முதல் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இதன்காரணமாக பல வைத்தியசாலைகளின் சேவைகள் பாதிப்படைந்துள்ளன.
சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளுக்கு சென்றிருந்த நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், புற்றுநோய், சிறுவர் மற்றும் மகளிர் வைத்தியசாலை, மத்திய குருதி வங்கி ஆகியனவற்றின் செயற்பாடுகள் வழமைப்போன்று இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.