Date:

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணை

பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்  சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை பிணையில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் புத்தளம் மேல் நீதிமன்றுக்கு பிணை விண்ணப்பம் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அது அந்நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டது.

அவருக்கு பிணை வழங்குவதற்கு  இந்நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்து நீதிபதி குறித்த விண்ணப்பத்தை நிராகரித்தார்.

இந்நிலையில், இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தத நிலையில், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை பிணையில்  விடுவிக்குமாறு புத்தளம் மேல் நீதிமன்றுக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவரது பிணை கோரிக்கையை ஆட்சேபிக்கப் போவதில்லை என்று சட்டமா அதிபர் அண்மையில் மன்றுக்குத் தெரியப்படுத்தி இருந்த நிலையில், அவருக்கு இன்று பிணை வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.

2020 ஏப்ரல் 14 ஆம் திகதி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டமைக்காக அவர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 18 மாதங்களாக அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எல்லயில் விபத்திற்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது

எல்ல - வெல்வாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த...

நேபாள நிலைமை தொடர்பில் ரணில் விசேட அறிக்கை

நேபாளத்தின் காத்மாண்டுவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

கைதிகள் தப்பியோட்டம்!

நேபாளத்தில் நாடு தழுவிய அமைதியின்மைக்கு மத்தியில், நேபாளம் லலித்பூரில் உள்ள நகு...

சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை?

சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய...