பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளார்.
இந்தக் கடிதம் சற்றுமுன்னர் அனுப்பப்பட்டதாக அறியமுடிந்தது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஆதரவாளர்களுக்கும் அமைதியான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட அமைதியின்மையைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்...
வன்முறையானது வன்முறையையே பிறப்பிக்கும் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
அறிக்கையொன்றை வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடிக்கு நிர்வாகம் உறுதியளித்த...
உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இன்று கொழும்பில் அலரிமாளிகைக்கு முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) கண்டனம் தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்ட சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ், இலங்கை சட்டத்தரணிகள்...
கொழும்பு தெற்கு, வடக்கு மற்றும் மத்திய பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிரதமரின் ஆதரவாளர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவத்தை தொடர்ந்து அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது.
இதனையடுத்து, தற்போது குறித்த பகுதிக்கு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர...
அலரிமாளிக்கைக்கு முன்பாக இருந்த “மைனாகோகம” மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்த கூடாரங்களை கிழித்தெறிந்து தீ மூட்டி கொளுத்திய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள், காலி முகத்திடலுள்ள “கோட்டா ஹோ கம” மீது...