உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறினார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது விஜயரமாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

ரயில் தடம் புரண்டது

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே ரயில், வியாழக்கிழமை (11) அன்று பதுளை மற்றும் ஹாலிஎல ரயில் நிலையங்களுக்கு இடையில் 178வது மைல்கல் அருகே தடம் புரண்டதால், மலையக...

பாராளுமன்றத்தில் பரபரப்பான சூழ்நிலை:10 நிமிடங்கள் ஒத்திவைப்பு

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட பரபரப்பான சூழ்நிலை காரணமாக, சபாநாயகர் பாராளுமன்ற நடவடிக்கைகளை 10 நிமிடங்கள் ஒத்திவைத்தார்.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு படையினர் தொடர்ந்தும் செயல்பட்டு வருவதாக சபுகஸ்கந்த பொலிஸார் தெரிவித்தனர். எரிபொருள் அகற்றப்பட்ட எண்ணெய் தாங்கி...

சட்டமூலத்தை சட்டமாக்கினார் சபாநாயகர்

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தை சபாநாயகர் கையெழுத்திட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார். இதன்மூலம் ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டம் உடன் அமுலுக்கு வந்துள்ளது. ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தின் 2வது வாசிப்பு...

முஸ்லிம்களின் புதைகுழி அகழ்வுப்பணி அடுத்த மாதம் ஆரம்பம், தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி பெறப்படும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின் புதைகுழி அகழ்வுப்பணி எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் ஆரம்பமாகும். தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி ஒத்துழைப்புகளையும் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என...

எல்லயில் விபத்திற்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது

எல்ல - வெல்வாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 ஆம் திகதி இரவு, சுற்றுலா சென்று மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த தங்காலை நகரசபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை...

நேபாள நிலைமை தொடர்பில் ரணில் விசேட அறிக்கை

நேபாளத்தின் காத்மாண்டுவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நேபாளத்தில் இளைஞர்கள் உட்பட அனைத்து வகையான கொலைகளையும் தாம் கண்டிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி தனது அறிக்கையில்...