கடந்த பண்டிகை காலத்தில் கடுமையாக உயர்ந்து வந்த முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் தற்போது குறைந்துள்ளன.
750 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சி தற்போது 700 ரூபாவிலிருந்து 690 ரூபாவிற்கு...
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று(03) முதல் மீண்டும் மூடப்படுகிறது.
வெளிநாட்டுக் கையிருப்பு பற்றாக்குறை காரணமாக மசகு எண்ணெய் கொள்வனவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நாளாந்தம் 6,500...
மஹாவிஹாரவங்சிக ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீதர்ம மஹாசங்க சபையினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு , 'ஸ்ரீ லங்காதீஷ்வர பத்ம விபூஷண்' விருது வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் வகையில் புதிய மென்பொருள் மற்றும் குறியீட்டு எண்கள் அறிமுகப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் பூரண தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மாத்திரமே, பொது இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என...
திடீர் என அண்மையில் எரிபொருட்களின் விலையை அதிகரித்ததன் காரணமாக மீன்பிடித்துறை பாரிய அளவில் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, வெளிநாட்டவர்கள் இலங்கையின் கரையோர பகுதிகளில் நிலத்தினை கையேற்பதன் காரணமாகவும் மீன்பிடித்துறை பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும்...
நாட்டில் ஒமிக்ரொன் தொற்றுக்குள்ளாகும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவு கடுமையாக எச்சரித்துள்ளது.
தற்போது வரையில் நாட்டில் 48 ஒமிக்ரொன் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் வீடுகளிலேயே சிகிச்சையளிக்கும் சேவைக்கான மருத்துர்கள்...
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 224 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 560,949 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நாட்டில்...