‘வெளிநாட்டவர்களுக்கு மட்டும்’என்ற கொள்கைஅனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் – இலங்கை சுற்றுலா சபை

நாட்டில் இயங்கும் சில உணவகங்கள் மற்றும் விடுதிகள், 'வெளிநாட்டவர்களுக்கு மட்டும்' என்ற கொள்கையைப் பின்பற்றி இலங்கையர்களைப் புறக்கணித்த சந்தர்ப்பங்கள் பதிவாகியுள்ளன. இதனால் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை...

இலங்கையில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லையென்ற அடிப்படையிலேயே ஜனாதிபதியின் உரை அமைந்திருந்தது- தமிழ் தேசியக் கூட்டமைப்பு

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையை ஆற்றினார். இதன்போது அவர் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து எந்த விடயத்தையும் முன்வைக்கவில்லை.மாறாக அரசியல் கொள்கைகளை ஒதுக்கி வைத்து...

ஐ.தே.க யால் இளைஞர்களை கொண்ட மூன்றாவது அணியை உருவாக்க முடியாது.- திஸ்ஸ அத்தநாயக்க

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஐக்கிய தேசியக் கட்சி முற்றாக பலவீனமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது; அதற்கு காரணம் அந்த கட்சியின்...

மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை – ஜனாதிபதி

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய முன்னுரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்ற எண்ணெய்யில் 70 சதவீதம் வாகனங்களுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. மின்னுற்பத்திக்காக 21 சதவீதமும், கைத்தொழில் துறைக்காக 4 சதவீதமும் பயன்படுகிறது. எனவே...

தமது ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதற்கு இடமளிக்கவில்லை – ஜனாதிபதி

தமது ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் எவையும் இடம்பெறுவதற்கு இடமளிக்கவில்லை என்றும், அவ்வாறான விடயங்களுக்கு இனியும் இடமளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது கொள்கை விளக்க உரையில் தெரிவித்துள்ளார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து, தமது...

9 ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று

9 ஆவது நாடாளுமன்றத்தின் 2 ஆவது அமர்வு இன்று (18) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. இதில் வெளிநாட்டு ராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்கள் பிரதம நீதியரசர், உயர்நீதிமன்ற நீதியரசர்கள், சட்டமா...

கொரோனா தொற்று உறுதியான 688 பேர் அடையாளம்

கொரோனா தொற்று உறுதியான மேலும் 688 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 597,035 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில்...

கொவிட் தொற்றால் மேலும் 07 பேர் மரணம்!

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 07 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...