மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

மஹவெவ - செவனபிட்டிய பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 58 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் வயலில் காணப்பட்ட தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான மின்கம்பியிலிருந்து சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக் கொள்ள முயன்றபோதே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதற்கு...

பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்கவுக்கு கொவிட்!

பிரதமரின் செயலாளர் அநுர திஸாநயாக்கவுக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது. பிரதமர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பூஸ்டர்

கர்ப்பிணி தாய்மார்களுக்கும் பூஸ்டர் டோஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிசியோதெரபிஸ்ட் வைத்தியர் பிரியங்கர ஜயவர்தன தெரிவித்தார். பூஸ்டர் தடுப்பூசியை பெறுவதன் ஊடாக கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பிறக்கவிருக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பு கிடைக்கும் என அவர்...

பல்வேறு பிரச்சினைகளுக்கான யோசனை திட்டம் பங்காளிகளினால் அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது

நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் ஆளும் கட்சியின் பங்காளிக்கட்சிகளால் தயாரிக்கப்பட்டுள்ள யோசனை திட்டம் எதிர்வரும் 2ம் திகதி அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது. இது தொடர்பான விசேட சந்திப்பொன்று நாளைய தினம் கொழும்பில் இடம்பெறவுள்ளதாக ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும்...

ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம்?

ஒமிக்ரோன் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் ரஞ்சித் படுவந்துடாவ தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் அடையாளம் காணப்படுகின்ற...

ஐ. நா. மனித உரிமை பேரவைக்கு அனுப்பும் கடிதம் தொடர்பான கலந்துரையாடல்

தொலைக்காணொளி தொழிநுட்பம் ஊடாக "ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு, கடிதம் ஒன்றை அனுப்புவதற்காக, தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் கட்சிகள் தற்சமயம் கூடி ஆராய்ந்து வருகின்ற" சந்திப்பு இடம்பெற்று வருகிறது. பயங்கரவாத தடைச்...

மேலும் 1,217 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

நாட்டில் இன்றைய தினம் மேலும் 1,217 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 631,816 ஆக அதிகரித்துள்ளது.

சைக்கிளோட்டப் போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு கௌரவிப்பு

இன்று மாலை மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் இன ஐக்கியத்தை வலியுறுத்தி நாடு தழுவிய சைக்கிளோட்டத்தை முன்னெடுத்துள்ள அம்பாறை மாவட்டம் பொத்துவில் பகுதியை சேர்ந்த‌ சுல்பிகார் என்பவரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை பிராந்திய...