நுவரெலியாவில் சீரற்ற வானிலையால் 2,331 பேர் பாதிப்பு – 6 பேர் மாயம்!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இன்று (03) மாலை நேர நிலவரப்படி 581 குடும்பங்களைச் சேர்ந்த 2,331 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் வெள்ளப் பெருக்கில் சிக்கி இருவரும், மண்சரிவில் சிக்கி நால்வருமாக இதுவரை மொத்தம் 6 பேர் காணாமல்போயுள்ளனர். மேலும், சீரற்ற காலநிலை காரணமாக மூவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

 

இதுவரை 439 குடும்பங்களைச் சேர்ந்த 1,734 பேர் இடம்பெயர்ந்து 7 தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

இவர்களுக்கான சகல வசதிகளையும் நுவரெலியா மாவட்ட செயலகம் ஊடாக முன்னெடுத்து வருவதாக மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

 

ஹட்டன், கொட்டகலை மற்றும் தலவாக்கலை ஆகிய பிரதேசங்களில் பல கிராமங்கள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இருப்பினும், இன்று மாலையில் நுவரெலியா நகரில் மழை குறைந்து வெள்ள நீர் சற்று வடிந்துள்ள போதிலும், வீடுகளுக்குள் இன்னமும் வெள்ள நீர் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

கொழும்பு – கண்டி பிரதான வீதி கீழ் கடுகன்னாவ பகுதியில் மூடப்படுகிறது

பராமரிப்புப் பணிகள் காரணமாக, கொழும்பு - கண்டி பிரதான வீதி கீழ் கடுகன்னாவ பிரதேசத்தில் இன்று (23) இரவு 11 மணி முதல்...

தாம் நிரபராதிகள்: யோஷித மற்றும் கரன்னாகொட மன்றில் தெரிவிப்பு

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்குத் தாம் நிரபராதிகள் என யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த...