மஹர சிறைச்சாலைக்கு ஏற்பட்ட பாதிப்பு!

மஹர சிறைச்சாலையில் நேற்று (01) ஏற்பட்ட பதற்ற நிலைக்கு மத்தியில் கைதிகள் குழுவொன்று அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டிருந்ததாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

 

குறித்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த கைதிகள் குழு நேற்றிரவு முழுவதும் அங்கிருந்து தப்பிச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டதுடன், பாதுகாப்புப் படையினரால் அவ்வாறான திட்டங்கள் பல சந்தர்ப்பங்களில் முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

எவ்வாறாயினும் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இச்சம்பவங்களின் போது அவர்களால் சிறைச்சாலையின் பல சொத்துக்களுக்குப்சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதுடன், நிர்வாகக் கட்டிடங்கள் மற்றும் ஆவணங்களுக்கும் தீவைத்து அழிக்கப்பட்டுள்ளமை  கிடைத்துள்ள காணொளிக் காட்சிகளில் பதிவாகியுள்ளது.

இன்று (02) முற்பகல் அளவில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் சிறைச்சாலையினுள் நிலவிய சூழ்நிலை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

பொலிஸ் ஊரடங்கு நீக்கம்

ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சூழவுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு நேற்று முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது. மஹர...

மஹர சிறையில் கோடிக்கணக்கில் நட்டம்

மஹ​ர சிறைச்சாலையில் இடம்பெற்ற சிறைக்கைதிகளின் அமைதியற்ற மற்றும் கலவரமான சூழ்நிலை காரணமாக, சிறைச்சாலை வளாகத்தில் உள்ள கட்டிடங்கள், அலுவலக உபகரணங்கள் மற்றும் பல...