நீர்கொழும்பில் கோர விபத்து: இருவர்பலி; லொறிக்குத் தீ வைப்பு

நீர்கொழும்பு – போலவலான பகுதியில் இன்று அதிகாலை 1:45 மணியளவில் கண்டெய்னர் லொறியும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் நீர்கொழும்பு, தாகொன்ன வீதியைச் சேர்ந்த 18 வயது தலிஷ் நிம்நெத் மற்றும் 19 வயது கவிந்து ஹஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.விபத்தைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், விபத்துக்குக் காரணமான கண்டெய்னர் லொறிக்குத் தீ வைத்தனர்.

விபத்துடன் தொடர்புடைய கண்டெய்னர் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கட்டானப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

பொரளையில் வீட்டின் மீது கைகுண்டு வீச்சு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையேயான தொடர் மோதலின் ஒரு பகுதியாகவே, பொரளை லெஸ்லி ரத்நாயக்க மாவத்தையிலுள்ள 141 வத்தை பகுதியில் உள்ள ஒரு...

‘GREY’ திரைப்படத்தில் “ரிஸி”யாக இணையும் முன்னணி நடிகர் ரிஸ்வான்!

சில இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரைப்பயணத்தில் இயக்குனர் Lee Murali நடிகர் மற்றும் தயாரிப்பாளர் Shelvin Das AzonwayPictures தயாரிப்பில் உருவாகி வரும்...