உலக சந்தையில் மீண்டும் எகிறிய கச்சாய் எண்ணெய் விலை

மத்திய கிழக்கில் மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 9% இற்கும் அதிகமான அளவில் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கமைய, ப்ரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை 7.29 டொலர்கள் அல்லது 9.59% இனால் அதிகரித்து, ஒரு பீப்பாய் 83.30 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

அத்துடன், டபிள்யூ.டி.ஐ (WTI) கச்சா எண்ணெய் விலை 6.73 டொலர்கள் அல்லது 9.42% இனால் அதிகரித்து, ஒரு பீப்பாய் 78.14 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள இந்த உயர்வானது, ஏப்ரல் 2 ஆம் திகதிக்குப் பின்னர் பதிவான மிக உயர்ந்த ஒருநாள் டொலர் வளர்ச்சியாகவும், ஜூன் 12 ஆம் திகதிக்குப் பின்னர் பதிவான மிக உயர்ந்த விலையாகவும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஈரானுடன் மீண்டும் இராணுவ ரீதியான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதை தொடர்ந்து, அமெரிக்காவினால் மீண்டும் கடற்படை முற்றுகை விதிக்கப்படும் என்றும், ஹோர்முஸ் நீரிணை ஊடாக கொண்டு செல்லப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 20% கட்டணம் அறவிடப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

ஈரானின் லாரக் தீவு மீது அமெரிக்கா தாக்குதல்

ஜூலை மாதத்தின் பிற்பகுதிக்குக்குப் பிறகு முதன்முறையாக அமெரிக்கப் படைகள் ஈரானிய நிலப்பரப்பு மீது தாக்குதல் நடத்தியுள்ளன.   ஈரானின் லாரக் தீவில் அமைந்துள்ள இரண்டு ஈரானிய...

நேபாள வெள்ளப்பெருக்கு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 762 ஆக உயர்வு

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 762 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   அத்துடன் 2,715 பேர் காணாமல் போயுள்ளதாக...