வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது.

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் சிலாபத்திலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையான கடலோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், குறித்த கடற்பரப்புகளில் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டைச் சூழ நிலவும் தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

நேபாளத்திற்கு புறப்படத் தயாராகும் இலங்கை நிவாரணக்குழு

அனர்த்த நிவாரண சேவைகளுக்காக அனுப்பி வைக்கப்படும் இலங்கை குழுக்களை எதிர்வரும் சில நாட்களுக்குள் நேபாளத்திற்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் இன்று

ஒவ்வொரு ஆண்டும் ஒகஸ்ட் 30 ஆம் திகதியானது 'வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாக' (International Day of the Victims of...