இன்று முதல் மருத்துவர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

மருத்துவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு வழங்கப்படாததையடுத்து, இன்று (23) முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

இதற்கமைய, இன்று முதல் எதிர்வரும் ஒரு வார காலத்திற்கு தினமும் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சை சேவைகளை மாத்திரம் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

இந்த இரண்டு மணிநேர காலப்பகுதியில் சங்கத்தின் கிளைக் கூட்டங்களையும் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் லசித தம்மிக்க தெரிவித்துள்ளார்.

 

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் சுகாதாரத் துறைக்கும் மருத்துவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு பிரச்சினைக்கும் அரசாங்கம் சாதகமான தீர்வை வழங்கத் தவறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இதன் காரணமாக அவசர மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டதாக, நேற்று (22) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியர் லசித தம்மிக்க மேலும் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

தாம் நிரபராதிகள்: யோஷித மற்றும் கரன்னாகொட மன்றில் தெரிவிப்பு

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்குத் தாம் நிரபராதிகள் என யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த...

மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரிப்பு: நுகர்வோரும் வர்த்தகர்களும் கடும் சிரமம்

மலையக மற்றும் தாழ்நில மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளமையால், நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.   இதற்கமைய, ஒரு கிலோகிராம் கறிமிளகாய் 950...